search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீராய்வு மனுக்கள்"

    சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசாரமாக வாதம் நடைபெற்றது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரணை செய்யப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவாக தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு நான்கு பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த  ரேஷ்மா, ஷானிலா, பிந்து மற்றும் கனக துர்கா இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

    ரேஷ்மா, ஷானிலா  இருவரும் இரண்டு முறை கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள். பிந்து, கனகதுர்கா இருவரும் முதல்முறையாக கோவிலுக்குள் சென்று வந்தவர்கள் ஆவார்கள்.



    இந்நிலையில் சீராய்வு மனுக்கள் மற்றும் புதிய மனுக்கள் என 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்தியது. நாயர் சேவா சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் கே.பராசரன் ஆஜராகி வாதாடினார். அப்போது, மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்றும், தீண்டாமையால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் சபரிமலைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோகிண்டன் நாரிமன், வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    அதன்பின்னர் தேவம்போர்டு முன்னாள் தலைவர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். தொடர்ந்து காரசாரமான வாதம் நடைபெறுகிறது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மற்றும் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


    இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சீராய்வு மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள், ஜனவரி 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த மனுக்கள் மீது திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    சபரிமலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், தற்போதைய தீர்ப்புக்கு தடை எதுவும் கிடையாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களையும் தடுத்து நிறுத்தினர்.



    மேலும், சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்வதாக தெரிவித்தது.

    அதன்படி, சபரிமலை விவகாரம் தொடர்பாக மனுக்களை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக 19 மறு ஆய்வு மனுக்களும், சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட உள்ளன. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை முடிவு செய்கிறது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர்.

    இதற்கிடையே சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கவில்லை.

    இதற்கிடையே சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.


    அப்போது, சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தன.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    ×